Corona Virus

மதுரையில் வேகமெடுக்கும் கொரோனா பரவல் : தமிழகத்தில் இன்று 3,756 பேருக்கு தொற்று... 64 பேர் பலி! #Covid19

இன்று மட்டும் 3,051 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,756 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,962 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 13,87,322 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 3,756 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 3,693 பேர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 63 பேர்.

இன்றைய பாதிப்பு எண்ணிக்கையின் மூலம் மொத்த பாதிப்பு 1,22,350 ஆக அதிகரித்துள்ளது. இன்று 64 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 1,700 ஆக அதிகரித்துள்ளது.

மதுரையில் வேகமெடுக்கும் கொரோனா பரவல் : தமிழகத்தில் இன்று 3,756 பேருக்கு தொற்று... 64 பேர் பலி! #Covid19

இன்று மட்டும் 3,051 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 74,167 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,261. அடுத்தபடியாக மதுரையில் 379 பேரும், திருவள்ளூரில் 300 பேரும், செங்கல்பட்டில் 273 பேரும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் நாள்தோறும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மதுரையில் மொத்த பாதிப்பு 5,057 ஆக உயர்ந்துள்ளது.

banner

Related Stories

Related Stories