Corona Virus

பெருகும் கொரோனா பரவல்: சித்த மருத்துவ முறையை சோதிக்க நிதி ஒதுக்காதது ஏன்? - மோடி அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

கொரோனா நோய்த் தொற்றுக்கு சித்த மருத்துவத்தை பயன்படுத்த பரிசோதனைகளை மேற்கொள்ள தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய மருத்துவ முறையை பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்குவது குறித்தும், மருந்துகளை ஆய்வு செய்து அது தொடர்பான விவரங்களை அரசிதழில் வெளியிட்டு, சாதாரண மனிதரும் பயன்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுப்ரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது.

பெருகும் கொரோனா பரவல்: சித்த மருத்துவ முறையை சோதிக்க நிதி ஒதுக்காதது ஏன்? - மோடி அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

இதுவரை கொரோனோ நோய்க்காக மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.  சீனாவில் அவர்களின் பாரம்பரிய மருத்துவ முறையை பின்பற்றுவதாகவும், அதன் காரணமாகவே நோய்தொற்று பரவல் குறைக்கப்பட்டுள்ளதாகவும்  இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

66 மருத்துவப் பொருட்களைக் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மருத்துவ பொடி ஒன்றை தயார் செய்துள்ளேன். இது உடலுக்கு எவ்விதமான எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தாது. இது குறித்து அரசு அதிகாரிகளுக்கும் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலமாக தெரிவித்த நிலையில் இதுவரை எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை.

ஆகவே சித்த மருத்துவத்தின் அடிப்படையில் கொரோனோவிற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் IMPRO எனும் மருத்துவப் பொடியை வைராலஜி நிபுணர்கள் பரிசோதித்து முடிவுகளை தருவிக்க , ஆயுஷ் அமைச்சகத்தின் செயலருக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

பெருகும் கொரோனா பரவல்: சித்த மருத்துவ முறையை சோதிக்க நிதி ஒதுக்காதது ஏன்? - மோடி அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

இந்த வழக்கின் தீர்ப்பினை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. அதனடிப்படையில், மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிசோதித்து, அது குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும், இந்திய மருத்துவம் தொடர்பான மருந்துகளை பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என தெரியவருகிறது. ஆகவே இந்திய மருத்துவமுறையை பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்குவது குறித்தும், மருந்துகளை ஆய்வு செய்து அது தொடர்பான விவரங்களை அரசிதழில் வெளியிட்டு, சாதாரண மனிதரும் பயன்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories