Corona Virus

ஆயிரங்களில் பாதிப்பு; சமூக பரவல் என அச்சமடையும் கர்நாடகா - லட்சத்தை கடந்தும் பாதிப்பில்லை; இது தமிழகம்!

கர்நாடகாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியிருப்பதாக அம்மாநில சட்ட அமைச்சர் மதுசுவாமி தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸின் தாக்கம் மற்ற மாநிலங்களை போன்று கர்நாடகாவிலும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதுகாறும் 25 ஆயிரத்து 317 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 401 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில் அம்மாநிலத்தில் கொரோனா தொற்று அதன் மூன்றாவது கட்டமான சமூக பரவல் நிலையை அடைந்திருப்பதாகவும், நிலைமை கைமீறி செல்கிறது என்றும் கர்நாடகாவின் சட்டத்துறை அமைச்சர் மது சுவாமி தெரிவித்துள்ளார்.

இதேபோல, ஐந்தாயிரத்துக்கும் மேலானோர் மட்டுமே பாதிக்கப்பட்டு 27 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள கேரள மாநிலத்திலும் வைரஸ் தொற்று சமூக பரவல் நிலையை நெருங்கிவிட்டதாக பினராயி விஜயன் அரசு கவலையுடன் தெரிவித்ததோடு, ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை நீட்டித்துள்ளது.

ஆயிரங்களில் பாதிப்பு; சமூக பரவல் என அச்சமடையும் கர்நாடகா - லட்சத்தை கடந்தும் பாதிப்பில்லை; இது தமிழகம்!
-

நாட்டில் இரண்டு மாநிலங்களில் வெளிப்படையாக கொரோனா பரவலில் நிலை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு 1500க்கும் அதிகமான உயிரிழப்புகளை கண்டுள்ள போதும் தமிழக அரசை நிர்வகிக்கும் எடப்பாடி பழனிசாமியும் அவரின் அமைச்சரவை சகாக்கள், அதிகாரிகள் என அனைவரும் தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவல் நிலையை அடையவேயில்லை என அடித்து கூறி வருகிறது.

நாடளவில் இரண்டாவது இடத்தில் தமிழகமும், உலகளவில் அதிக பாதிப்புகளை கொண்ட நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாவது இடத்திலும் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கப்படுகிறது. சூழல் இப்படி இருக்கும் நிலையிலும் சமூக பரவல் நிலை உருவாகவில்லை என பச்சையாக பொய் கூறுவது மக்களின் உயிர் மீது எடப்பாடி அரசுக்கு எள்ளளவும் அக்கறை இல்லை என்பதனையே திண்ணமாக காண்பிக்கிறது என அரசியல் நோக்கர்கள், சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories