Corona Virus

விருதுநகரில் வெகுவாக அதிகரித்த கொரோனா பரவல் : தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு தொற்று... 65 பேர் பலி!

தமிழகத்தில் இன்று மட்டும் 3,616 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று மட்டும் 3,616 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் மேலும் 3,616 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்களில், 3,551 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 65 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டுமே இன்று 1,203 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 71,230 ஆக உயர்ந்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டத்தில் 334 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 253 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் தினந்தோறும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று மட்டும் 35,423 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை 13 லட்சத்து 52 ஆயிரத்து 360 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று மட்டும் கொரோனா குணமடைந்து 4,545 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் இதுவரை வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 71 ஆயிரத்து 116 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 45,839 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 65 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,636 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories