Corona Virus

மீண்டும் தமிழகம் வரும் மத்திய குழு : ஆய்வு மட்டுமே போதுமா? தீர்வு என்ன? நிதியைப் பெறுமா எடப்பாடி அரசு?

தமிழக மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைவதால் நாளை தமிழகத்துக்கு மத்திய மருத்துவக் குழுவை அனுப்புகிறது மத்திய அரசு.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் அதிகரித்து வந்த நோய்த் தொற்று தற்போது தமிழகம் முழுவதுமே வேகமாகப் பரவுகிறது. அதைப்போல் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதையடுத்து மத்திய அரசு, மருத்துவ நிபுணா்கள் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவை தமிழகத்திற்கு நாளை அனுப்புகிறது. மத்திய கூடுதல் செயலாளா் ஆா்த்தி அகுஜா தலைமையில் மத்திய இணை செயலாளா் ராஜேந்திர ரத்னோ, இணை செயலாளா் சுபோத் யாடவா, மருத்துவர்கள் சுவரூப் சாகு, சதீஷ் ஆகிய 5 போ் கொண்ட மத்திய குழுவினா் நாளை மாலை 5 மணிக்கு பெங்களூரிலிருந்து தனி விமானத்தில் சென்னை வருகின்றனா்.

மீண்டும் தமிழகம் வரும் மத்திய குழு : ஆய்வு மட்டுமே போதுமா? தீர்வு என்ன? நிதியைப் பெறுமா எடப்பாடி அரசு?

சென்னை வரும் இந்த மத்திய குழுவினா் தமிழக முதலமைச்சரை சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரிகிறது. அதோடு சுகாதாரத்துறை அமைச்சா், தலைமைச் செயலாளா், சுகாதாரத்துறை செயலாளா் மற்றும் உயா் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இங்குள்ள மருத்துவ குழுவினரோடும் ஆலோசணை நடத்துவாா்கள் என்று தெரிகிறது.

கொரோனா நோயாளிகள் அதிகமாக சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகள், தனிமைப்படுத்தப்பட்டுள்ள முகாம்கள் ஆகியவற்றையும் பாா்வையிட உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் சென்று பார்வையிட்டுவிட்டு மத்தியக்குழு தங்களது 2 நாட்கள் பயணத்தை நிறைவு செய்துவிட்டு 10 ஆம் தேதி தனி விமானத்தில் சென்னையிலிருந்து டெல்லி திரும்புவார்கள் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் மத்திய குழுவினரின் வருகையும் ஆய்வும் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்திட முடியாது. அவ்வாறு வருகை தரும் மத்தியக் குழுவிடமும், மத்திய அரசிடத்திலும் ஆட்சியில் உள்ளவர்கள் மாநிலத்துக்கு வரவேண்டிய நிதியைப் பெற்று போர்க்கால அடிப்படையில் சோதனைகளையும் தடுப்பு நடவடிக்கைகளையும் மாநிலம் முழுவதிலும் முடுக்கிவிட வேண்டும் என்பதே அரசியல் நோக்கர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

banner

Related Stories

Related Stories