Corona Virus

“4வது நாளாக தமிழகத்தில் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு” : நாள்தோறும் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை! #Corona

தமிழகத்தில் இன்று மட்டும் 4,150 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று மட்டும் 4,150 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்களில், 4,077 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 73 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டுமே இன்று 1,713 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 68,254 ஆக உயர்ந்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டத்தில் 307 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 274 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் தினந்தோறும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று மட்டும் 34,831 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், இதுவரை 13 லட்சத்து 41 ஆயிரத்து 715 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்று மட்டும் கொரோனா குணமடைந்து 2,186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் இதுவரை வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 778 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 46,860 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 60 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories