Corona Virus

“இதுவரை இல்லாத உச்சம் தொட்ட பாதிப்பு”: இன்று மட்டும் 4,343 பேருக்கு கொரோனா தொற்று... 57 பேர் பலி! #Corona

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக, இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நாட்டிலேயே முதன்முறையாக சி.டி ஸ்கேன், மொபைல் எக்ஸ்ரே உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் 750 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சைக்காக 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதியவர்கள், கேன்சர் நோயாளிகள், இதய நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பது சவாலாக உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் சமூகப் பரவல் இல்லை. ஐ.சி.எம்.ஆர் மட்டுமே சமூகப் பரவல் குறித்து தெரிவிக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

“இதுவரை இல்லாத உச்சம் தொட்ட பாதிப்பு”: இன்று மட்டும் 4,343 பேருக்கு கொரோனா தொற்று... 57 பேர் பலி! #Corona

கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 4,270 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 73 பேர் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதனால் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டுமே இன்று 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமே பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இன்று மட்டும் 33,488 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 12 லட்சத்து 35 ஆயிரத்து 692 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்று மட்டும் 3,095 பேர் கொரோனா குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 56,021 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 57 பேர் உயிரிழந்தனர். அதில், 20 பேர் தனியார் மருத்துவமனையிலும், 37 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1,321 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories