Corona Virus

ஒரே ஒரு திருமணம்... மணமகன் பலி; 86 பேருக்கு கொரோனா தொற்று - பீகாரில் ‘பகீர்’!

பீகாரில் குடும்பத்தினர் கட்டாயத்தால் காய்ச்சலிலும் திருமணச் சடங்குகளில் பங்கேற்ற மணமகன் உயிரிழந்ததை அடுத்து 86 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

ஒரே ஒரு திருமணம்... மணமகன் பலி; 86 பேருக்கு கொரோனா தொற்று - பீகாரில் ‘பகீர்’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் நாள்தோறும் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேபோல, உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர் உச்சத்தில் இருக்கும் இந்நேரத்தில் மத்திய அரசு ஊரடங்கை நீட்டித்து நடவடிக்கைகளை விரைவுபடுத்தாமல் இரண்டாவது கட்ட தளர்வுகளை அளித்துள்ளது.

இதனால், வைரஸ் பரவல் மீது மக்களுக்கு அலட்சியம் ஏற்பட்டு மேன்மேலும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத மத்திய மோடி அரசு மாநில அரசுகளிடத்தில் சுமையை ஏற்றி எது வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் எனும் தொனியில் விலகி இருப்பது ஏற்கத்தக்கதல்ல எனவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பீகார் மாநிலத்தின் பாட்னாவுக்கு 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலிகஞ்ச் என்ற பகுதியில் திருமண நிகழ்வில் பங்கேற்ற நூற்றுக்கும் மேலானோருக்கு கொரோனா அறிகுறி இருந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஒரே ஒரு திருமணம்... மணமகன் பலி; 86 பேருக்கு கொரோனா தொற்று - பீகாரில் ‘பகீர்’!

கூர்கான் பகுதியில் பொறியாளராகப் பணியாற்றி வந்த மணமகனுக்கு கடந்த ஜூன் 15ம் தேதியன்று பலிகஞ்ச் பகுதியில் திருமணம் நடந்திருக்கிறது. திருமண நாளுக்கு முன்பு வரை மணமகனுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு, காய்ச்சல் என கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளன.

இருப்பினும், மருந்து எடுத்துக்கொண்டு திருமணச் சடங்குகளில் பங்கேற்குமாறு குடும்பத்தினர் நிர்ப்பந்திருக்கிறார்கள். அவ்வாறு பங்கேற்காவிடில் திருமணத்துக்காக பெரும் பொருட்செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்தும் வீணாகிவிடும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள். இதனையடுத்து வேறு வழியின்றி திருமணச் சடங்குகளில் மணமகன் பங்கேற்றிருக்கிறார்.

அந்த நிகழ்வில் 300க்கும் மேலானோர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. திருமணம் நடந்த பிறகு மணமகனின் உடல் வெப்பநிலை அதிகரித்த காரணத்தால் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக சென்றுகொண்டிருந்தபோது வழியிலேயே அந்த மணமகன் உயிரிழந்திருக்கிறார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என முடிவெடுத்த உறவினர்கள் அவருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளாமலேயே இறுதிச் சடங்குகளை முடித்திருக்கிறார்கள்.

ஒரே ஒரு திருமணம்... மணமகன் பலி; 86 பேருக்கு கொரோனா தொற்று - பீகாரில் ‘பகீர்’!

ஆனால் இதுதொடர்பாக அறிந்த பாட்னா மாவட்ட நிர்வாகத்தினர் கடந்த 19ம் தேதி விசாரணை நடத்தியதில் பலிகஞ்ச் திருமணத்தில் பங்கேற்றதில் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதையடுத்து, தீவிரமான தேடுதலுக்குப் பிறகு அந்த மணமகனின் திருமணம் மற்றும் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களை அடையாளம் கண்டு அவர்கள் அனைவரையும் தனிமை முகாமில் வைத்து கண்காணித்ததில் 86 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது.

திருமண நிகழ்வுகளில் நெருங்கிய உறவினர்கள் உட்பட 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பீகார் மாநிலத்தில் நடந்த இந்த நிகழ்வால் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த திருமணத்தால் மட்டுமே மாநிலத்தின் ஒரு நாள் கொரோனா பாதிப்பு உச்சமடைந்துள்ளது.

இதுவரயில் பீகாரில் 10 ஆயிரத்து 43 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் 67 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories