Corona Virus

சென்னையை மிரட்டும் கொரோனா: மேலும் 2,393 பேர் பாதிப்பு; 42 பேர் பலி - சமூக பரவலே இல்லையென மழுப்பல் தேவையா?

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் புதிதாக 3,943 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

சென்னையை மிரட்டும் கொரோனா: மேலும் 2,393 பேர் பாதிப்பு; 42 பேர் பலி - சமூக பரவலே இல்லையென மழுப்பல் தேவையா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் இன்று 30 ஆயிரத்து 59 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அதிகபட்சமாக சென்னையில் மட்டுமே 2,393 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, மதுரையில் 357 பேருக்கும், செங்கல்பட்டில் 160 பேருக்கும், திருவள்ளூரில் 153 பேருக்கும் அதிகபட்சமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 90 ஆயிரத்து 167 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டுமே 55 ஆயிரத்து 912 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையை மிரட்டும் கொரோனா: மேலும் 2,393 பேர் பாதிப்பு; 42 பேர் பலி - சமூக பரவலே இல்லையென மழுப்பல் தேவையா?

இன்றைய சுகாதாரத்துறையின் அறிக்கையின் படி, மேலும் 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை அடுத்து தமிழகத்தில் 1,201 ஆக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதிலும் சென்னையில் 42 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 60 பேரில் மூவருக்கு கொரோனாவை தவிர எவ்வித துணை நோய் பாதிப்புகளும் ஏற்படவில்லை.

அதேபோல இன்று ஒரே நாளில் இரண்டாயிரத்து 325 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 50 ஆயிரத்து 74 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 38 ஆயிரத்து 889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை மிரட்டும் கொரோனா: மேலும் 2,393 பேர் பாதிப்பு; 42 பேர் பலி - சமூக பரவலே இல்லையென மழுப்பல் தேவையா?

மேலும், இன்றைய மூவாயிரத்து 943 கொரோனா பாதிப்புகளில் தமிழகத்திலேயே இருந்த 3,856 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை நீங்கலாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 87 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

இவ்வாறு நாள்தோறும் கொரோனா தொற்றால் 3,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையிலும் தமிழகத்தை ஆட்சி செய்யக்கூடிய எடப்பாடியின் அ.தி.மு.க அரசு மாநிலத்தில் கொரோனா பரவல் சமூக அளவில் ஏற்பட்டுவிடவில்லை என தொடர்ந்து கூறி வருவது ஏற்கத்தக்கதாக இல்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories