Corona Virus

சென்னையில் இன்று ஒரே நாளில் 2,167 பேருக்கு கொரோனா..37 பேர் பலி.. என்ன திட்டத்துடன் உள்ளது அ.தி.மு.க அரசு?

தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு நான்காயிரத்தை எட்டும் அளவுக்கு கொரோனா பரவல் அதிகமடைந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,949 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, 30 ஆயிரத்து ஐந்து பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தமிழகத்திலேயே இருந்த 3,841 பேருக்கும், வெளி மாநில, நாடுகளில் இருந்து வந்த 108 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 224 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் முதல் முறையாக புதிய உச்சமாக ஒரெ நாளில் இரண்டாயிரத்து 167 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதன்படி மொத்த பாதிப்பு 55 ஆயிரத்து 969 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 2,167 பேருக்கு கொரோனா..37 பேர் பலி.. என்ன திட்டத்துடன் உள்ளது அ.தி.மு.க அரசு?

சென்னைக்கு அடுத்தபடியாக இன்று மதுரையில் 290 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 2,302 ஆக உள்ளது. அதேபோல செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,141 ஆக அதிகரித்துள்ளது. அதில், இன்று ஒரே நாளில் 62 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள். அதில் 11 பேருக்கு எவ்வித துணை நோயும் இல்லாமல் உயிரிழந்திருப்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த 62 பேரில் சென்னையில் மட்டுமே 37 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 846 ஆக உள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 2,167 பேருக்கு கொரோனா..37 பேர் பலி.. என்ன திட்டத்துடன் உள்ளது அ.தி.மு.க அரசு?

அதேச்சமயத்தில் 2 ஆயிரத்து 212 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து இதுவரை 47 ஆயிரத்து 749 பேர் சிகிச்சை பெற்று விட்டுக்கு அனுப்பட்டுள்ளனர். இதையடுத்து தற்போது 37 ஆயிரத்து 331 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 47 அரசு மற்றும் 43 தனியார் என பரிசோதனை ஆய்வுக்கூடங்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்திருந்தாலும் ஒரு நாளுக்கு 30 ஆயிரம் பேர் என்ற சோதனை எண்ணிக்கையை மேலும் உயர்த்த வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

banner

Related Stories

Related Stories