Corona Virus

“தமிழகத்தில் இறப்பு விகிதம் அதிகமே” - மத்திய அரசின் அறிக்கையும், எடப்பாடி அரசின் மழுப்பலும்..! #Corona

மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களிலேயே 85 சதவிகித கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 4 மாதங்களாகியும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. 5 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளை இந்தியா பெற்றுள்ளது.

கடந்த ஆறே நாட்களில் மட்டுமே 1 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழுவின் 17வது ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம். அதில், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத், உத்தர பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்களிலேயே கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழகத்தில் இறப்பு விகிதம் அதிகமே” - மத்திய அரசின் அறிக்கையும், எடப்பாடி அரசின் மழுப்பலும்..! #Corona

மேலும், நாடு முழுவதும் உறுதியாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 85.5 சதவிகிதம் பேர் மேற்குறிப்பிட்ட அந்த 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அதேபோல, கொரோனா நோயால் உயிரிழப்பு எண்ணிக்கையிலும் 87 சதவிகிதம் அந்த மாநிலங்களில் பதிவாகியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுவரையில், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 58.13 சதவிகிதம் பேர் குணமடைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசே தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது என அறிக்கை வெளியிட்ட போதும், தமிழகத்தை ஆட்சி செய்து வரும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசோ மாநிலத்தில் கொரோனாவால் பலியாவோரின் விகிதம் குறைவாகவே உள்ளது என தொடர்ந்து பொய் உரைத்து வருகிறது.

ஏற்கெனவே சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு மறைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள மத்திய அரசின் அறிக்கை தமிழக அரசின் வெளிப்படைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories