Corona Virus

ஜூன் மாத தொடக்கத்திலிருந்து தினசரி 1.25 லட்சம் பேருக்கு தொற்று- 1 கோடியைக் கடந்த கொரோனா பாதிப்பு! #Corona

ஜூன் மாத தொடக்கத்திலிருந்து நாள்தோறும் 1.25 லட்சத்துக்கும் மேலானோர் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்துள்ளது. கொரோனாவால் பலி எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது என வேர்ல்டோ மீட்டர் கணக்கின்படி தெரிவி்க்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அடுத்த 6 மாதத்துக்குள் உலகளவில் ஒரு கோடி பேர் இந்த கொடூர வைரஸின் பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் குணமடைந்தோர் எண்ணிக்கை 54 லட்சத்து 58 ஆயிரத்து 523 ஆக உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து ஆயிரத்து 109 ஆக உள்ளது.

ஜூன் மாத தொடக்கத்திலிருந்து தினசரி 1.25 லட்சம் பேருக்கு தொற்று- 1 கோடியைக் கடந்த கொரோனா பாதிப்பு! #Corona

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வின்படி அதிகபட்சமாக அமெரிக்காவில் 25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அமெரிக்காவில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து152 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், பெரு, சிலி ஆகிய நாடுகளிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்த 3 நாடுகளிலும் சேர்த்து 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் மாத தொடக்கத்திலிருந்து நாள்தோறும் 1.25 லட்சத்துக்கும் மேலானோர் உலகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பான ஒரு கோடியில் மூன்றில் இரு பங்கு மே மற்றும் ஜூன் மாதங்களில்தான் ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories