Corona Virus

ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிரட்டும் கொரோனா பரவல்... முதன்முறையாக ஒரே நாளில் 3,713 பேருக்கு வைரஸ் பாதிப்பு!

இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மொத்த பாதிப்பு 80 ஆயிரத்தை நெருங்குகிறது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் இன்று 32 ஆயிரத்து 68 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 3,713 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதில், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 89 பேர் நீங்கலாக தமிழகத்திலேயே இருந்தவர்கள் 3,624 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மொத்த பாதிப்பு 78 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை இதுவரை பதிவானதை விட மிக அதிகமாகும். அதேபோல சென்னையில் இன்று ஒரே நாளில் 1,939 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 37 மாவட்டங்களில் 36 மாவட்டங்களிலும் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிரட்டும் கொரோனா பரவல்... முதன்முறையாக ஒரே நாளில் 3,713 பேருக்கு வைரஸ் பாதிப்பு!

அதில், சென்னையைத் தவிர செங்கல்பட்டு, மதுரை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்கள் இன்று 100க்கும் அதிகமான பாதிப்புகளை கொண்டுள்ளன. அதேபோல, காஞ்சிபுரம், ராமநாதபுரம், இராணிப்பேட்டை மாவட்டங்களில் 90க்கும் அதிகமானோரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், தொற்றாளர்களைப் போன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இன்று மிக அதிகமாக உள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் கொரோனாவால் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 1025 ஆக அதிகரித்துள்ளது. அதில், எவ்வித துணை நோயும் இல்லாமல் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிரட்டும் கொரோனா பரவல்... முதன்முறையாக ஒரே நாளில் 3,713 பேருக்கு வைரஸ் பாதிப்பு!

அதிகபட்சமாக சென்னையில் 46 பேரும், மதுரையில் 7 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள். சென்னையில் மட்டுமே இதுவரையில் 776 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் இரண்டாயிரத்து 737 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் மொத்தமாக டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 94 ஆக உள்ளது. ஆகவே தற்போது 33 ஆயிரத்து 213 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories