Corona Virus

மதுரையிலும் அமலானது முழு ஊரடங்கு: மீண்டும் மாநிலம் தழுவிய லாக்டவுனுக்கு தயாராகிறதா தமிழகம்? #CoronaCrisis

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக மதுரையிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் 64 ஆயிரத்து 603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 35 ஆயிரத்து 339 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தாலும், நேற்றைய நிலவரப்படி 28 ஆயிரத்து 428 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தினந்தோறும் 2500க்கும் மேலானோர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தொடக்கத்தில் சென்னையில், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே அதிகரித்து காணப்பட்ட கொரோனா பரவல் தற்போது மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் பரவி வருகிறது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்ததால் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால், மாநிலம் தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது.

மதுரையிலும் அமலானது முழு ஊரடங்கு: மீண்டும் மாநிலம் தழுவிய லாக்டவுனுக்கு தயாராகிறதா தமிழகம்? #CoronaCrisis

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் ஜூன் 24 முதல் 30ம் தேதி நள்ளிரவு வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊரடங்கு விதி முறைகளை மாவட்ட மக்களுக்கு ஆடியோ மூலம் அறிவுறுத்தியுள்ளார் மாவட்ட ஆட்சியர் வினய்.

அதில், “மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஒன்றிய பகுதிகளிலும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. 24.06.20முதல் 30ம்தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். ஊரடங்கு நேரத்தில் காய்கறி, மளிகைக்கடை, பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.

நடமாடும் காய்கறி, பழக்கடைகளும் அதே நேரத்தில் இயங்கும். அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும். ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடைகளுக்கே செல்ல வேண்டும். ஊரடங்கு நேரத்தில் பரவை, மாட்டுத்தாவணி சந்தைகள் இயங்காது. மீன், இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி இல்லை.

காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும், காய்ச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருப்பின் மருத்துவ முகாம்களை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

மதுரையில் நேற்று வரை 988 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால் இந்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை அம்மாவட்டத்தில் 405 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டும் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories