Corona Virus

கொரோனாவுக்கு திருப்பூரில் முதல் பலி.. 22 வயது ஆம்புலன்ஸ் ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு! #CoronaCrisis

கொரோனா வைரஸால் முன்கள வீரர்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருவது பொதுமக்களிடையே மேலும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை போன்று வைரஸ் தாக்குதலால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் இரட்டை இலக்கில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரையில் 800க்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள்.

அதில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சேவையாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் என பலரும் 100க்கணக்கில் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். அதேபோல, கொரோனா முன்கள வீரரகளும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்ற 22 வயதுடைய இளைஞன் 108 ஆம்புலன்ஸில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

கொரோனாவுக்கு திருப்பூரில் முதல் பலி.. 22 வயது ஆம்புலன்ஸ் ஊழியர் பரிதாபமாக உயிரிழப்பு! #CoronaCrisis

கணேசன், திருப்பூர் மங்கலத்தில் தங்கி கோவை அவிநாசிபாளையத்தில் 108 ஆம்புலன்ஸில் பணியாற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த ஜூன் 18ம் தேதி கொரோனா தொற்றுக்கு ஆளான கணேசனுக்கு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த ஒரு வாரமாக அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்துள்ளது. இந்நேரத்தில், இன்று (ஜூன் 24) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். கொரோனா வைரஸூக்கு ஆளான கணேசனுக்கு எவரிடம் இருந்து தொற்று ஏற்பட்டது என்று இதுவரை கண்டறியப்படவில்லை. இப்படி இருக்கையில், ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தது பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டு வரும் வேளையில் தொடர்ச்சியாக முன்கள பணியாளர்கள் கொரோனாவால் உயிரிழந்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories