Corona Virus

தினந்தோறும் தீவிரமாகும் தொற்று பரவல் : இன்று மட்டும் 2,865 பேர் பாதிப்பு! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவுக்கு 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 91 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இன்றைய பாதிப்பின் மூலம் மொத்த பாதிப்பு 67ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,814 ஆக அதிகரித்துள்ளது.

தினந்தோறும் தீவிரமாகும் தொற்று பரவல் : இன்று மட்டும் 2,865 பேர் பாதிப்பு! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 32,079 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 9,76,431 மாதிரிகள் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பால் இன்று 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 2,424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 37,763 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 28,836 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories