நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கடுமையாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக அத்தியாவசிய தேவையின்றி மக்கள் பொது வெளியில் நடமாடவோ, மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் மக்கள் சுற்றித்திறியவோ கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது
இப்படி இருக்கையில், மேற்கு வங்க மாநிலத்தின் மெடினிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.கவின் பவன் ஜனா என்பவர் கடந்த 17ம் தேதி கொல்லப்பட்டதற்கு அம்மாநில அரசை ஆளும் திரிணாமுல் காங்கிரஸார்தான் காரணம் என மேற்கு வங்க பா.ஜக தலைவர் திலீப் கோஷ் குற்றஞ்சாட்டியிருந்தார்.சியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர்.
இப்படி இருக்கையில், மேற்கு வங்க மாநிலத்தின் மெடினிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.கவின் பவன் ஜனா என்பவர் கடந்த 17ம் தேதி கொல்லப்பட்டதற்கு அம்மாநில அரசை ஆளும் திரிணாமுல் காங்கிரஸார்தான் காரணம் என மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல், உயிரிழந்த பவன் ஜனாவுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் எனக் கூறி கட்சி அலுவலகத்தில் 150க்கும் மேலானோரை அழைத்து பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் கூட்டம் கூட்டியுள்ளார். இதற்காக காவல் துறையிடம் இருந்து உரிய அனுமதியும் பெறவில்லை.
ஊரடங்கு நேரத்தில் இவ்வாறு கூட்டம் கூட்டியது பரபரப்பானதை அடுத்து, திலீப் கோஷ் மீதும், அக்கட்சியின் ஜோதிர்மெ, போஸ் உள்ளிட்டோர் மீதும் மேற்கு வங்க போலிஸார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். மேலும், பவன் ஜனாவின் கொலைக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கு எவ்வித தொடர்பும் இல்லையென ஊர்ஜிதமாகியுள்ளதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.