Corona Virus

“நெல்லையில் பரிசோதனை மைய மருத்துவர், பணியாளர்களுக்கு கொரோனா தொற்று” - பரிசோதனை நடத்துவதில் சிக்கல்!

திருநெல்வேலி கொரோனா பரிசோதனை ஆய்வகத்தில் மருத்துவர் மற்றும் பணியாளர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.

“நெல்லையில் பரிசோதனை மைய மருத்துவர், பணியாளர்களுக்கு கொரோனா தொற்று” - பரிசோதனை நடத்துவதில் சிக்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை ஆய்வகத்தில் மருத்துவர் மற்றும் பணியாளர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்துவதிலும், முடிவுகள் அறிவிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையத்தில் பணியாற்றிய மருத்துவர் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்களுக்கு கடந்த 2 நாட்களுக்குமுன் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் போதிய ஆய்வகப் பணியாளர்கள் அங்கு பணியில் இல்லை என்று தெரிகிறது. இதனால் பரிசோதனை முடிவுகள் அறிவிப்பதில் கடந்த 2 நாட்களாகவே தாமதம் ஏற்பட்டு வருகிறது.

நாளொன்றுக்கு 600-க்கும் மேற்பட்ட மாதிரிகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா பரிசோதனை மையத்தில் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாதிரிகளை தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதனால் முடிவுகளுக்காக காத்திருக்கும் நபர்கள் தனிமை முகாம்களில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories