Corona Virus

“ஜூன் 30க்கு பிறகு சென்னையில் கொரோனா பரவல் குறையும்” - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி! #CoronaCrisis

சென்னையில் 10 சதவிகித வாகன போக்குவரத்தே இயங்குகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை மாநகராட்சியில் வீடு வீடாகச் சென்று பரிசோதனைகள் செய்வது, மருத்துவ முகாம்கள் என பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தினந்தோறும் நடைபெறும் மருத்துவ முகாம்கள் பெரிதும் பயனளிக்கும் வகையில் உள்ளது.

நேற்று முன்தினம் நடந்த மருத்துவ முகாமில் 36,071 பேர் பயனடைந்துள்ளனர். மருத்துவ முகாம்கள் நடைபெறுவதை மக்களுக்குத் தெரிவிக்க பலவிதமான அறிவிப்புகளை வழங்கி வருகிறோம். வீட்டு தனிமைக்காக HQIMS-FOCUS VOLUNTEER என்ற புதிய திட்டத்தை தொடங்கி உள்ளோம்.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகளுக்கு ஒரு தன்னார்வலரை நியமித்து தனிமைப்படுத்துவோரை கண்காணிக்க உள்ளதாகவும், Focus Volunteerகளுக்கு தனியாக பதிவேடு வழங்கப்பட்டு 14 நாட்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்களின் நடவடிக்கையை அவர்கள் கண்காணிக்க வேண்டும்.

“ஜூன் 30க்கு பிறகு சென்னையில் கொரோனா பரவல் குறையும்” - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி! #CoronaCrisis

தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது, நல்ல பலனளித்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 2,000 படுக்கைகள் இந்த வார இறுதிக்குள் தயாராகும். ஐ.ஐ.டியில் 1,200 படுக்கைகளும், அத்திப்பேட்டை குடியிருப்பில் 4,200 படுக்கைகள் கூடுதலாக தயாராகி வருகிறது.

மற்ற கட்டிடங்களில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு வருவதால் அண்ணா பல்கலைக்கழகத்தின் விடுதிகளை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை. மாணவர்கள் விடுதிகளை வழங்குவதில் சில சிக்கல் இருப்பதால் மற்ற இடத்தில் தேவையான படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது நடைமுறையில் இருக்கும் 12 நாள் ஊரடங்கில் பல நன்மைகள் கிடைக்கும். வாகனங்கள் இயக்கம் கடுமையாக்கப்பட்டுள்ளதால் தற்போது நகரில் 10% வாகன போக்குவரத்துதான் இயக்கத்தில் உள்ளது என்றார். ஊரடங்கிற்குப் பின் பெருவாரியான தொற்று குறையும் என நம்புகிறோம்” என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories