Corona Virus

“இன்னும் 15 நாட்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும்” - ஜோதிடரான அமைச்சர் பாண்டியராஜன்!

தமிழகத்தில் இனியும் ஊரடங்கு நீட்டிக்கப்படாது என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் தினந்தோறும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது தெரிய வருகிறது. மாநிலத்தில் மொத்த பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையோ 700க்கும் அதிகமாகியுள்ளது.

சென்னையில் மட்டுமே 40 ஆயிரத்துக்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ளதால் சென்னையில் வசித்து வந்த பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தற்போது சென்னையைப் போன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது.

“இன்னும் 15 நாட்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும்” - ஜோதிடரான அமைச்சர் பாண்டியராஜன்!

இதனால் தற்போது மாநிலம் தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க அமைச்சர் பாண்டியராஜன், இன்னும் பதினைந்தே நாட்களில் தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்குள் வரும் எனக் கூறியுள்ளார்.

மேலும், மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்க அதிகரிக்க கொரோனா பாதிப்பு குறையும் என்ற அமைச்சர் பாண்டியராஜன், இதற்கும் மேலும் ஊரடங்கை நீட்டிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் 3 நாட்களில் கொரோனா போய்விடும் என்ற முதலமைச்சர் தற்போது கொரோனாவை ஒழிக்க கடவுளால்தான் முடியும் எனத் தெரிவிக்கிறார். அதேபோல, சென்னை மாநகராட்சி ஆணையரோ ஜூன் 30ம் தேதிக்குள் கொரோனா பரவல் குறையும் என கூறியிருக்கிறார்.

தற்போது அமைச்சர் பாண்டியராஜனோ 15 நாட்களில் கொரோனா குறைந்துவிடும் என கூறியுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக ஆளாளுக்கு ஜோதிடம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

banner

Related Stories

Related Stories