Corona Virus

சென்னையை போல் பிற மாவட்டங்களிலும் பரவும் கொரோனா: இன்று 2,532 பேர் பாதிப்பு.. 53 பேர் பலி! #CoronaUpdates

நேற்று 32 ஆயிரத்துக்கும் மேலானோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று 29 ஆயிரமாக கொரோனா சோதனை குறைந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் இரண்டாயிரத்து 532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. வெளிமாநில மற்றும் நாடுகளில் இருந்து வந்த 52 பேர் நீங்கலாக தமிழகத்திலேயே 2,480 தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இதனையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது. வழக்கம் போல் சென்னையிலேயே இன்றும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், ஆயிரத்து 493 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து 41 ஆயிரத்து 172 ஆக மொத்த பாதிப்பு உயர்ந்துள்ளது.

சென்னையை போல் பிற மாவட்டங்களிலும் பரவும் கொரோனா: இன்று 2,532 பேர் பாதிப்பு.. 53 பேர் பலி! #CoronaUpdates

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மட்டுமே 1039 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 121 பேருக்கும், திருவள்ளூரில் 120 பேருக்கும், கடலூரில் 90 பேருக்கும், வேலூரில் 87 பேருக்கும், திருவண்ணாமலையில் 76 பேருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று 32 ஆயிரத்துக்கும் மேலானோருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில் இன்று 29 ஆயிரத்து 963 பேருக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில், வழக்கம் போல் 1,579 பேர் ஆண்களும், 953 பேர் பெண்களும் ஆவர்.

அண்மைக்காலங்களாக கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை இரட்டை இலக்கை எட்டி வந்துக்கொண்டிருந்தது. இன்று அரைசதத்தை கடந்துள்ளது. அதன்படி 53 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையை போல் பிற மாவட்டங்களிலும் பரவும் கொரோனா: இன்று 2,532 பேர் பாதிப்பு.. 53 பேர் பலி! #CoronaUpdates

அந்த 53 பேரில் 3 பேருக்கு எவ்வித துணை நோயும் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். சென்னையில் மட்டுமே இன்று 42 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதையடுத்து சென்னையில் இதுவரை 601 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அதேபோல, இன்று 1,438 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதை அடுத்து 32 ஆயிரத்து 754 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே தற்போது 25 ஆயிரத்து 863 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories