Corona Virus

ஊதியம் தராமல் அலைக்கழிக்கும் அ.தி.மு.க அரசு.. வேதனையுடன் திணறும் கொரோனா ஆய்வக ஊழியர்கள்! #CoronaCrisis

கொரோனா ஆய்வக ஊழியர்களாக 3000 பேரை தற்காலிகமாக நியமித்த அ.தி.மு.க அரசு அவர்களுக்கான சம்பளத்தை வழங்காமல் அலைக்கழித்து வருகிறது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்துக் கொண்டே வருகிறது. ஊரடங்கு அறிவித்த கடந்த 80 நாட்களில் முதல் முறையாக 24 ஆயிரம் பேருக்கு நேற்றுதான் தமிழக சுகாதாரத்துறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளது.

நோய் பரவலின் தீவிரத்தை அறிந்தும், மக்களின் உயிரை காக்க போர்க்கால அடிப்படையில் முடிவெடுக்க முடியாமல் டெல்லி எஜமானர்களின் உத்தரவுக்காக நித்தமும் காத்துக்கொண்டிருக்கிறது ஆளும் அ.தி.மு.க அரசு. இந்த அலட்சியப் போக்கிற்கு மக்களின் உயிர் பலியாகி வருகிறது.

ஊதியம் தராமல் அலைக்கழிக்கும் அ.தி.மு.க அரசு.. வேதனையுடன் திணறும் கொரோனா ஆய்வக ஊழியர்கள்! #CoronaCrisis

இதற்கிடையே, ஓய்வுபெற வேண்டிய மருத்துவ பணியாளர்களின் பணிகாலத்தை நீட்டித்தும், ஒப்பந்த முறையில் ஊழியர்களை நியமித்தும் வருகிறது தமிழக அரசு. அவ்வாறு நியமிக்கப்படுவோருக்கும் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்வதற்காக இரண்டு ஆண்டு ஒப்பந்த முறையில் தற்காலிக ஆய்வகக்கூட நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

நியமிக்கப்பட்ட 3000 பேருக்கும் மாதம் தலா ரூ.8,000 என சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டது. அவ்வாறு பணியாற்றும் ஊழியர்கள் அனைவருமே சொந்த ஊரை விட்டு வெவ்வேறு மாவட்டங்களிலேயே பணியமர்த்தப்பட்டனர்.

2 மாதங்கள் ஆகியும் இவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மாத ஊதியத்தை அதிமுக அரசு இதுகாறும் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒப்பந்த ஊழியர்கள் என்பதால் இவர்களுக்கென தனியாக சங்கமும் இல்லாததால் சம்பளம் பெறுவது தொடர்பாக யாரை அணுகுவது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories