Corona Virus

முதன்முறையாக இன்று 2,174 பேருக்கு கொரோனா : தமிழகத்தில் 50,000ஐ கடந்தது வைரஸ் பாதிப்பு! #CoronaUpdates

கொரோனாவால் பாதிக்காப்பட்டோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 50 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் முதல் முறையாக ஒரு நாள் பாதிப்பு இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் மட்டுமே 2,094 பேருக்கும், வெளி மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வந்த 80 பேர் என 2,174 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதையடுத்து, மொத்த பாதிப்பு 50 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 1,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து 35 ஆயிரத்து 556 ஆக மொத்த பாதிப்பு உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உள்ளது. ஆகவே இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது. 48 பேரில் 10 பேர் கொரோனாவை தவிர எவ்வித துணை நோயும் இல்லாதவர்கள் ஆவர்.

முதன்முறையாக இன்று 2,174 பேருக்கு கொரோனா : தமிழகத்தில் 50,000ஐ கடந்தது வைரஸ் பாதிப்பு! #CoronaUpdates

சென்னையில் ஒரே நாளில் 40 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள். அதில், 21, 24, 25, 30 வயதைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்திருக்கிறார்கள். இதையடுத்து, 461 ஆக சென்னையில் பலியானோர் எண்ணைக்கி உயர்ந்துள்ளது.

இன்று வரையில் 27 ஆயிரத்து 624 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டுமே 842 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். ஆகவே சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 990 ஆக உள்ளது.

12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், குழந்தைகள் மட்டுமே இரண்டாயிரத்து 533 பேரும், 13-60 வயதுக்குட்பட்டவர்கள் 41 ஆயிரத்து 742 பேரும், 5 ஆயிரத்து 918 பேர் 60 வயதுக்கு மேலானோரும், 20 திருநங்கைகளும் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories