Corona Virus

நியூசிலாந்தில் 2வது அலை? புதிதாக இருவருக்கு கொரோனா பாதிப்பு.. பீதியில் மக்கள்..! #CoronaCrisis

பிரிட்டனில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் நியூசிலாந்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து தற்போதுவரை நியூசிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,504 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆகவும் உள்ளது.

கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 5 கட்டங்களாக நியூசிலாந்தில் பின்பற்றபட்டு வந்தன. அந்நாட்டு அரசின் தீவிர நடவடிக்கையால், உலகில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் 106வது இடத்தில் உள்ளது நியூசிலாந்து.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. கடைசி கொரோனா நோயாளியும் கடந்த வாரம் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனதால் கொரோனா பாதிப்பு இல்லாத நாடாக நியூசிலாந்து மாறியது.

பெண் பிரதமரான ஜெசிந்தாவின் துடிப்பான சீரிய நடவடிக்கைக்கு உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது. சமூக வலைதளங்களிலும் ஜெசிந்தாவின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன.

நியூசிலாந்தில் 2வது அலை? புதிதாக இருவருக்கு கொரோனா பாதிப்பு.. பீதியில் மக்கள்..! #CoronaCrisis

மேலும் பாதிப்பை பொறுத்து ஜூன் 22ம் தேதியோடு பொது முடக்கத்தை தளர்த்தவும் முடிவெடுக்க உள்ளதாகவும் பிரதமர் ஜெசிந்தா கூறியிருந்தார்.

இந்த நிலையில், பிரிட்டன் நாட்டில் இருந்து துபாயின் தோஹா வழியாக ஒரு பெண்ணும், ஆஸ்திரிலேயாவின் பிரிஸ்பேன் வழியாக நியூசிலாந்துக்கு வந்த மற்றொரு பெண்ணும் ஆக்லாந்தில் உள்ள தனிமை முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவருக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. அதேச் சமயத்தில் நியூசிலாந்திலேயே இருப்பவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா இல்லாத நாடாக இருந்த நியூஸிலாந்தில் தற்போது இரண்டு பாதிப்புகள் இறக்குமதியாகியுள்ளதால் கொரோனா பீதியில் இருந்து மீண்ட அந்நாட்டு மக்களுக்கு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories