Corona Virus

ஒரே நாளில் 380 பேர் பலி.. 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. என்ன செய்ய காத்திருக்கிறது மோடி அரசு?

கொரோனாவால் நாடு முழுவதும் ஒரே நாளில் பலியானோரின் எண்ணிக்கை 380 ஆக உயர்ந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஒரு நாளுக்கு 9 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரம் வரையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டே வருகிறது. 3 லட்சத்து 43 ஆயிரத்து 91 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் உலக அளவில் 4வது இடத்திலேயே நீடித்து வருகிறது.

இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை நெருங்கி வருகிறது. அதன்படி 9 ஆயிரத்து 915 பேர் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள். ஒரே நாளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை இதுகாறும் 290 ஆக இருந்த நிலையில் நேற்று மட்டுமே 380 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 380 பேர் பலி.. 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. என்ன செய்ய காத்திருக்கிறது மோடி அரசு?

கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்து 667 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் அதிக பாதிப்பை உடைய மாநிலமாக மகாராஷ்டிரா நீடித்து வந்தாலும், அதற்கடுத்தபடியாக தமிழ்நாடு, டெல்லி குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

தமிழகத்தில் 46,504 பேருக்கும், டெல்லியில் 42 ஆயிரத்து 829 பேருக்கும் இதுவரை தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக நாளொன்றுக்கு 2000 வீதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதேபோல தமிழகத்திலும் தினந்தோறும் 1900க்கும் குறைவானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒரே நாளில் 380 பேர் பலி.. 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. என்ன செய்ய காத்திருக்கிறது மோடி அரசு?

ஒரு புறம் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வரும் வேளையில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 215 பேர் குணமடந்திருக்கிறார்கள். அதன்படி, குணமானவர்கள் 1.80 லட்சத்து 320 பேர் நீங்கலாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையே 1.52 லட்சத்து 856 ஆக உள்ளது.

இவ்வாறு கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் இன்றும் நாளையும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

banner

Related Stories

Related Stories