Corona Virus

இதுதான் சகல வசதியா? அரசு மருத்துவமனையில் கதறும் பெண் நோயாளி.. வீடியோ வெளியிட்ட கணவர்.. சென்னையில் அவலம்!

அடிப்படை வசதிகள் இல்லாமல் ஆண்கள் நிறைந்த கொரோனா வார்டில் இளம்பெண்ணை தங்க வைத்துள்ளது சென்னை ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் கொரோனாவினால் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1400ஐ கடந்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் போதிய இடங்கள் இல்லாததால் சில நோயாளிகள் வீட்டிலேயே தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் ஒரு நாளுக்கு 15 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் வசூலிப்பதால் அங்கும் சென்று சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டதை அடுத்து நேற்று ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதுதான் சகல வசதியா? அரசு மருத்துவமனையில் கதறும் பெண் நோயாளி.. வீடியோ வெளியிட்ட கணவர்.. சென்னையில் அவலம்!

அங்கு பெண்களுக்கு என தனி வார்டுகள் ஏதும் ஒதுக்கப்படாததால் சுமார் 43 ஆண்கள் நிறைந்துள்ள வார்டில் அந்த பெண்ணை தங்க வைத்திருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். அதுமட்டுமல்லாமல், அங்கு அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவுகளும் சரியாக இல்லை, மருத்துவமனையில் உள்ள கழிவறைகளும் தூய்மையாக இல்லை என அப்பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, தனது கணவருடன் அவர் கண் கலங்கியபடி உரையாடி ஆடியோவும் வெளியாகியுள்ளது. தன்னால் அங்கு இருக்க முடியவில்லை மன அழுத்தமாக உள்ளது என தான் மேற்கொள்ளும் சிரமங்களை எடுத்துரைத்துள்ளார்.

இதுதான் சகல வசதியா? அரசு மருத்துவமனையில் கதறும் பெண் நோயாளி.. வீடியோ வெளியிட்ட கணவர்.. சென்னையில் அவலம்!

அதன் பிறகு அந்த பெண்ணின் கணவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், தொலைக்காட்சியில் பேட்டியளிக்கும் போது அரசு தரப்பில் இருந்து நோயாளிகளுக்கு சகல வசதிகளும் செய்தருவதாக கூறுகிறார்கள். ஆனால் உண்மை நிலை தலைகீழாக உள்ளது.

இதனை அரசு உடனடியாக சீர் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது இது தொடர்பான ஆடியோவும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வட்டமடித்து அதிமுக அரசின் செயல்பாடுகள் கிழித்தெறியப்பட்டு வருகின்றன.

banner

Related Stories

Related Stories