Corona Virus

ஓட்டு அரசியலுக்காக சென்னையை கோட்டைவிட்ட அ.தி.மு.க அரசு..? கொரோனாவின் பிடியில் தத்தளிக்கும் தலைநகரம்!  

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதில் மெத்தனம் காட்டும் அ.தி.மு.க அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் நாள்தோறும் இரண்டாயிரத்துக்கும் குறைவான மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதிலும் சென்னையின் நிலைமையோ கவலைக்கிடமாக உள்ளது.

தினந்தோறும் புதிதாக 1400 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்போ 30,444 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகமாக பாதிக்கப்பட்ட 15 மண்டலங்களில் 10 மண்டலங்களில் 1000க்கும் அதிகமான பாதிப்பை பெற்றுள்ளது.

இதற்கிடையே ஊரடங்கு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு தளர்வுகள் வழங்கியுள்ளதால் பெரும்பாலான மக்கள் வெளியே சென்று வருகின்றனர். 3 மாதங்களாக எவ்வித வருமானமும் இல்லாமல் இருந்ததால் தளர்வு வழங்கியதும் வெளியே வந்த மக்களுக்கு முன்பிருந்த வாழ்க்கை கிட்டவில்லை.

ஓட்டு அரசியலுக்காக சென்னையை கோட்டைவிட்ட அ.தி.மு.க அரசு..? கொரோனாவின் பிடியில் தத்தளிக்கும் தலைநகரம்!  

வருமானமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக இருந்துவிடவில்லை. ஏனெனில், கொரோனா அச்சம் காரணமாக மக்கள் நேரடியாக கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவதை குறைத்து வருகின்றனர். இதனால், அன்றாடம் தொழில் ஈட்டுவோர் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது.

அரசோ வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என வாய்மொழி வார்த்தையாக மட்டுமே கூறியிருப்பதால் வீட்டு உரிமையாளர்கள் அதனை பின்பற்றாமல் வாடகைதாரர்களிடம் ஊரடங்கு நேரத்திலும் வாடகையை வசூலிப்பதை தவிர்க்கவில்லை. அவ்வாறு வாடகை கொடுக்க முடியாத சூழலில் இருந்தாலும், முன் பணத்தில் இருந்து கழித்துக் கொள்கின்றனர். வந்தாரை வாழ வைக்கும் மாநகரமாக இருந்த சென்னையில் வாழ்ந்து வரும் மக்களோ கொரோனா அச்சத்தால் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் நிகழ்வும் நடந்தேறி வருகிறது.

இப்படியான மோசமான சூழலில் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஆளும் தரப்போ அவரவர்களின் சொந்த மாவட்டங்களில் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு சென்னையை புறக்கணித்து வருவதாலேயே இங்கு நாளுக்கு நாள் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

2021ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை மனதில் வைத்து, அதிமுகவினர் தங்களது சொந்த ஊரில் தங்களை நிலை நிறுத்திக்கொள்வதற்காக ஓட்டு அரசியலை இப்போதில் இருந்தே தொடங்கியுள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அரசியல் ரீதியில் சென்னையால் தங்களக்கு எவ்வித லாபமும் ஏற்படாது என நினைத்து, ஆளுங்கட்சியினர் குழப்பமான மனநிலையில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. இன்னமும் தாமதமப்படுத்தாமல் போர்க்கால அடிப்படையில் தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து அரசு மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

banner

Related Stories

Related Stories