Corona Virus

தினமும் உயரும் கொரோனா உயிரிழப்புகள்.. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசு: புதிதாக 1974 பேருக்கு கொரோனா!

சென்னையில் மீண்டும் 1400க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 347 ஆக உயர்ந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 661 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1974 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், வெளி மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வந்த 33 பேரை தவிர தமிழகத்திலேயே இருந்த 1941 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மீண்டும் ஒரு நாள் பாதிப்பு ஆயிரத்தை 415 ஆக எட்டியுள்ளது. அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 896 ஆக உள்ளது. முதல் முறையாக ஒரே நாளில் தமிழகத்தில் 38 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது.

அதில், சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 31 பேர் உள்ளனர். இதையடுத்து சென்னையில் இதுவரை 347 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், இன்று எவ்வித துணை நோய் பாதிப்புகளும் இல்லாமல் வெறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 7 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

தினமும் உயரும் கொரோனா உயிரிழப்புகள்.. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசு: புதிதாக 1974 பேருக்கு கொரோனா!

இன்று தொற்று பாதிக்கப்பட்டுள்ள 29 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 178 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அங்கு ஒட்டுமொத்த பாதிப்பு 2882 ஆக உயர்ந்திருக்கிறது. அதற்கு பிறகு திருவள்ளூரில் 81 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டதால் 1865 ஆக மொத்த பாதிப்பு உயர்ந்திருக்கிறது.

மேலும் 18 ஆயிரத்து 782 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இன்று 1,170 ஆண்களுக்கும், 804 பெண்களுக்கும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதுவரையில் 27 ஆயிரத்து 520 ஆண்களும், 17 ஆயிரத்து 124 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தினமும் உயரும் கொரோனா உயிரிழப்புகள்.. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசு: புதிதாக 1974 பேருக்கு கொரோனா!

குணமடந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 547 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,138 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து 19 ஆயிரத்து 676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 537 மாதிரிகளின் முடிவுகள் வரவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories