Corona Virus

தடுப்பு நடவடிக்கையில் கோட்டைவிட்ட அரசு : ஒரே நாளில் 30 பேர் பலி - சென்னையில் 30,000ஐ கடந்த கொரோனா பரவல்!

தமிழகத்தில் முதன்முறையாக இன்று ஒரே நாளில் 30 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் மீண்டும் ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வெளிமாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 33 பேர் தவிர தமிழகத்தில் மட்டுமே 1,956 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து, மொத்த பாதிப்பு 42 ஆயிரத்து 687 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றும் ஆயிரத்துக்கும் மேலானோர் புதிதாக வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் 1,484 பேருக்கு கொரோனா உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தடுப்பு நடவடிக்கையில் கோட்டைவிட்ட அரசு : ஒரே நாளில் 30 பேர் பலி - சென்னையில் 30,000ஐ கடந்த கொரோனா பரவல்!

அதன்படி, சென்னையில் ஒட்டுமொத்த பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்து 30,444 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 397 ஆக அதிகரித்துள்ளது. முதல் முறையாக இன்று ஒரே நாளில் 30 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதில், 7 பேர் எவ்வித துணை நோயும் இல்லாமலேயே உயிரிழந்திருக்கிறார்கள்.

30 பேரில் 25 பேரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆகவே சென்னையில் மொத்த உயிரிழப்பு 316 ஆக உயர்ந்துள்ளது.

தடுப்பு நடவடிக்கையில் கோட்டைவிட்ட அரசு : ஒரே நாளில் 30 பேர் பலி - சென்னையில் 30,000ஐ கடந்த கொரோனா பரவல்!

மேலும், தமிழகம் முழுவதும் இன்று 1,362 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து 23 ஆயிரத்து 409 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். ஆகையால் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 878 ஆக உள்ளது.

கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் அதிகரிக்கப்பட்ட போதும், இன்று 17 ஆயிரத்து 911 பேருக்கு மட்டுமே பரிசோதனை நடத்தியிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories