Corona Virus

தமிழகத்தில் மேலும் 1,875 பேருக்கு வைரஸ் தொற்று : ஒரே நாளில் 23 பேர் பலி - சென்னையில் கொரோனா பரவல் உச்சம்!

இன்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 456 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், 1,875 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 38 பேருக்கும், தமிழகத்திலேயே உள்ள 1,837 பேருக்கும் இன்று வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மொத்த பாதிப்பு 38 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் வெளிமாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 1,961 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 1,875 பேருக்கு வைரஸ் தொற்று : ஒரே நாளில் 23 பேர் பலி - சென்னையில் கொரோனா பரவல் உச்சம்!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,407 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இன்றைய வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அதன் மூலம் மொத்தமாக 27 ஆயிரத்து 398 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் போன்று தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்தே காணப்படுகிறது. இன்று 23 பேர் பலியாகியிருக்கிறார்கள். அதில், 19 பேர் சென்னையைச் சேர்ந்தவர்களாவர். மேலும் எவ்வித துணை நோய் பாதிப்பும் இல்லாமல் 3 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் மேலும் 1,875 பேருக்கு வைரஸ் தொற்று : ஒரே நாளில் 23 பேர் பலி - சென்னையில் கொரோனா பரவல் உச்சம்!

அதையடுத்து, டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளது. இன்று 1,372 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டதோடு சேர்த்து இதுவரை 20 ஆயிரத்து 705 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 659 ஆக உள்ளது.

இதுவரையில் 6.16 லட்சத்து 395 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றும், இன்று 16 ஆயிரத்து 829 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் முழுவதும் 44 அரசு ஆர்.டி பி.சி.ஆர் ஆய்வகங்கள், 33 தனியார் ஆய்வகங்கள் என 77 பரிசோதனை ஆய்வகங்கள் இருந்தும் நாளொன்று சராசரியாக 15 ஆயிரத்துக்கு உட்பட்ட மாதிரிகளே சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories