Corona Virus

“நாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது”- அதிர்ச்சியூட்டும் ICMR அறிக்கை! CoronaCrisis

கொரோனாவால் உயிரிழப்போர் அதிகமுள்ள மாநிலங்களில் குஜராத் முதலிடத்தில் உள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதுவரையில் 2.76 லட்சத்து 583 ஆக உள்ளது. அதே சமயத்தில் குணமானவர்களின் எண்ணிக்கை 1.35 லட்சத்து 206 ஆக உள்ளது. மேலும், பலியானோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 745 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 9 ஆயிரத்து 985 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்றும், நேற்று ஒரே நாளில் 279 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள் எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

“நாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது”- அதிர்ச்சியூட்டும் ICMR அறிக்கை! CoronaCrisis

மேலும், இதுவரையில் நாட்டில் 50 லட்சத்து 61 ஆயிரத்து 332 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது என்றும், நேற்று 1.45 லட்சத்து 216 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா சோதனை நடத்துவதில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அகில இந்திய அளவில் அதிகப்படியான சோதனைகளை நடத்துவதில் ஜம்மு காஷ்மீர் முதலிடத்திலும், டெல்லி இரண்டாவதாகவும், மூன்றாவதாக ஆந்திராவும் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

“நாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது”- அதிர்ச்சியூட்டும் ICMR அறிக்கை! CoronaCrisis

தமிழகத்தில் 10 லட்சம் பேரில் 8 ஆயிரத்து 67 பேர் என்கிற அளவிலேயே கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள ஐ.சி.எம்.ஆர், இதுவரை தமிழகத்தில் 6.21 லட்சத்து 171 சோதனைகளே செய்யப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் பரவும் நிலை அகில இந்திய அளவில் 5.46 சதவிகிதமாக இருக்கிறது என்றால், தமிழகத்தில் மட்டுமே அது 5.62 சதவிகிதமாக உள்ளது என அதிர்ச்சியூட்டும் தகவலையும் தெரிவித்துள்ளது.

“நாட்டிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது”- அதிர்ச்சியூட்டும் ICMR அறிக்கை! CoronaCrisis

அதேபோல, நாடளவில் கொரோனாவால் உயிரிழப்போரின் பட்டியலில் முதலில் இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவில் இறப்பு விகிதம் 2.8 சதவிகிதம் என்றால், குஜராத்தில் மட்டுமே 6.24 சதவிகிதமாக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories