Corona Virus

“கொரோனாவை கட்டுப்படுத்தாவிடில் தினமும் 1,000க்கும் மேல் உயிரிழப்புகள் கூடும்” - அரசுக்கு ICMR எச்சரிக்கை!

கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பீகார் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 2 லட்சத்து 58 ஆயிரத்து 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 1 லட்சத்து 24 ஆயிரத்து 95 பேர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேசமயத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையோ ஏழாயிரத்து 207 ஆக அதிகரித்துள்ளது. மே 29ம் தேதியில் இருந்து நேற்று வரை இந்தியாவில் நாள்தோறும் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 200க்கும் அதிகமாகவே உள்ளது.

அதேபோல, இரண்டு நாட்களாக தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. ஆனால் மத்திய அரசோ, மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து உயிரிழப்பு விகிதமும், பாதிக்கப்படுவோரின் விகிதமும் குறைவாகவே உள்ளது என நித்தமும் கூறி வருகிறது.

“கொரோனாவை கட்டுப்படுத்தாவிடில் தினமும் 1,000க்கும் மேல் உயிரிழப்புகள் கூடும்” - அரசுக்கு ICMR எச்சரிக்கை!

கடந்த வாரம் நடைபெற்ற நிதி ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற ஐ.சி.எம்.ஆர் அதிகாரிகளோ நாட்டில் கொரோனாவால் நிகழும் உயிரிழப்புகளை தடுக்காவிட்டால் 2.8 சதவிகிதமாக உள்ள இறப்பு விகிதம் 5 சதவிகிதத்தை தாண்டினால் பெரும் ஆபத்தை விளைவிக்கும் எனக் கூறியுள்ளனர்.

மேலும், நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கும் அபாய நிலை ஏற்படும் என மத்திய அரசை எச்சரித்துள்ளனர். ஆனால், மோடி அரசோ உலக அளவில் ஒப்பிடும்போது ஒரு லட்சம் பேருக்கு 0.49 சதவிகித அளவிலேயே பலி எண்ணிக்கை உள்ளது என தெரிவித்துள்ளது.

இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள ஹர்ஷவர்தன் கடந்த மே 15ம் தேதிக்கு பிறகு கொரோனா தொடர்பான எந்த ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தவில்லை. அதேபோல, சுகாதாரத்துறையும் தினந்தோறும் செய்தியாளர்களை சந்திப்பதையும் படிப்படியாக குறைத்து தற்போது நிறுத்தியுள்ளது.

மேலும், உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷாவோ கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள பீகார் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளார்.

இப்படியான இக்கட்டான சூழலில் நாடு உள்ள நிலையில் எந்த தயக்கமும் இல்லாமல் மோடியின் அமைச்சரவை சகாக்கள் செயல்படுவதும், ஊரடங்கில் தளர்வுகளை கொடுத்து மாநில அரசுகள் முடிவெடுக்கட்டும் என கூறுவதும் மக்களின் மீதான அலட்சியத்தையே காட்டுகிறது என எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories