Corona Virus

தமிழகத்தில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா பரவல்... 22 வயது இளைஞர் உட்பட 17 பேர் பலி! #CoronaUpdates

கொரோனா வைரஸால் தமிழகத்தில் இன்றும் புதிதாக 1,500க்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் புதிதாக பரிசோதிக்கப்பட்ட 14 ஆயிரத்து 454 பேரில் 1,562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 42 பேரைத் தவிர, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 1,520 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் சென்னையில் மட்டுமே 1,149 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு 23 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, ஒட்டுமொத்த தமிழகத்தில் 33 ஆயிரத்து 229 ஆக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து உச்சத்தில் கொரோனா பரவல்... 22 வயது இளைஞர் உட்பட 17 பேர் பலி! #CoronaUpdates

தொற்று பாதிப்பை போன்று உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று மேலும் 17 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டுமே இன்று 14 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 528 ஆக உள்ளது. இதுவரை 17 ஆயிரத்து 527 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் கொரோனா தாக்கத்தில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்கள் என்ற தகவலை அரசு குறிப்பிடவில்லை.

அதையடுத்து, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 413 ஆக உள்ளது.

banner

Related Stories

Related Stories