Corona Virus

சென்னையில் ஆயிரமாயிரமாக உயரும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் மேலும் 18 பேர் பலி! #CoronaUpdates

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தை கடந்ததோடு, உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 269 ஆக அதிகரித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்த 18 பேர் உட்பட தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1515 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 667 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, மாநிலத்தின் தலைநகரான சென்னையில் இன்றும் ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகளையே கொண்டுள்ளது. அதன்படி இன்று 1155 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 22 ஆயிரத்து 149 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆயிரமாயிரமாக உயரும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் மேலும் 18 பேர் பலி! #CoronaUpdates

மேலும், இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அதில் 15 பேர் மட்டுமே சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். இதர மூவரும் வேலூர், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டுவைச் சேர்ந்தவர்கள். ஆகவே இதுவரை பலியானோர் எண்ணிக்கை 269 ஆக உள்ளது.

அதேபோல, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டதில் இன்று 604 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 16 ஆயிரத்து 999 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், வீட்டுக்கு அனுப்பப்பட்ட அனைவரும் பூரண நலம் பெற்றவர்களா இல்லையா என்பதை அரசு இன்னும் அறிவிக்கவில்லை.

12 வயதுக்குட்பட்ட 1699 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல, 13-60 வயதுடையோரில் 26 ஆயிரத்து 631 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டோரில் 3 ஆயிரத்து 337 பேரும், 17 திருநங்கைகளுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் ஆயிரமாயிரமாக உயரும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் மேலும் 18 பேர் பலி! #CoronaUpdates

டிஸ்சார்ஜ் ஆனவர்கள் நீங்கலாக தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 396 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 10 ஆயிரத்து 982 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்த போதும் இன்று 15 ஆயிரத்து 671 பேருக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இதுவரை 5 லட்சத்து 27 ஆயிரத்து 212 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும், சென்னையில் மட்டுமே 1 லட்சத்து 21 ஆயிரத்து 950 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories