Corona Virus

7வது நாளாக தமிழகத்தில் 1,000ஐ கடந்த கொரோனா : சென்னையில் 20,993 பேருக்கு தொற்று - ஒரே நாளில் 19 பேர் பலி!

தொடர்ந்து ஏழாவது நாளாக தமிழகத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இன்று 15 ஆயிரத்து 389 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தமிழகத்தில் 1,423 பேருக்கும், வெளிமாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வந்தவர்களில் 35 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அதேபோல, சென்னையிலும் 4வது நாளாக ஆயிரத்தைக் கடந்துள்ளது கொரோனா பாதிப்பு. அதன்படி, இன்று 1,146 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து, மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 30 ஆயிரத்து 152 ஆக உயர்ந்துள்ளது.

7வது நாளாக தமிழகத்தில் 1,000ஐ கடந்த கொரோனா : சென்னையில் 20,993 பேருக்கு தொற்று - ஒரே நாளில் 19 பேர் பலி!

வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது போல, தினந்தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி, முதல்முறையாக ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அதில், 9 பேர் அரசு மருத்துவமனையிலும், 10 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்று 633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து, இதுவரை 16 ஆயிரத்து 395 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, 13 ஆயிரத்து 503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories