கொரோனா பரவலின் தீவிரம் இந்தியாவில் அதிவேகமாக உயர்ந்து வருகிறது. உலக அளவில், கொரோனா பாதிப்பில் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.
ஜூலை அல்லது ஆகஸ்ட் இறுதிக்குள் 10 லட்சம் தொற்று பாதிப்புகளை இந்தியாவில் ஏற்படும் என ஏற்கெனவே ஐ.சி.எம்.ஆர் கணித்திருந்தது. அதேபோல பல்வேறு நிறுவனங்களும், மருத்துவ நிபுணர்களும் ஊரடங்கில் தளார்வுகளை வழங்கினால் கட்டாயம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கவே செய்யும். மீண்டும் லாக்டவுன் அறிவுப்பு வெளியிடும் சூழலும் ஏற்படும் என எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 67 கோடி பேர் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என மதிப்பிட்டு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நோய்க்கான அறிகுறிகள் இல்லாமல் இருந்து வருகிறது. அதில், 5 சதவிகித நோயாளிகளின் உடல்நிலையே தீவிரமான பாதிப்பை சந்திக்கிறது. அப்படி, மக்கள் அடர்த்தியை பொறுத்து 67 கோடி பேரில் சுமார் 30 கோடி பேர் தீவிரமான பாதிப்பை சந்திப்பர் எனவும் கணக்கிட்டுள்ளது.
மேலும், மே 16ம் தேதி நிலவரப்படி, ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் 21 சதவிகிதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். அதன்படி, கணக்கிடப்பட்டதில் 3.5 கோடி மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாவார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.