Corona Virus

Covid தடுப்பூசி விநியோகத்துக்கு பில்கேட்ஸ் 750 மில்லியன் டாலர் ஒதுக்கீடு: இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கான தடுப்பூசி விநியோகம் தொடங்கும் என ஆஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸுக்கு, தடுப்பூசியோ, குணப்படுத்தும் மருந்துகளோ இல்லாத காரணத்தால் உலகெங்கிலும் 65 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளில் கோவிட் 19 தொற்றுக்கான மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ், ஆஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள கொரோனாவுக்கு தடுப்பு மருந்து விநியோகத்திற்காக 750 மில்லியன் டாலர்களை வழங்கவுள்ளார்.

கொரோனாவுக்கான ஆஸ்ட்ராஜெனெகாவின் மருந்து இன்னும் வளர்ச்சிக் கட்டத்தில் இருந்தாலும், வெகுஜன உற்பத்திக்கான நிலையை எட்டிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பில்கேட்ஸின், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை வழங்கியுள்ள நிதி உலகளாவிய விநியோகத்துக்காக பயன்படுத்தப்பட இருக்கிறது என்றும் ஆஸ்ட்ராஜெனெகா அறிக்கை வெளியிட்டுள்ளது.

Covid தடுப்பூசி விநியோகத்துக்கு பில்கேட்ஸ் 750 மில்லியன் டாலர் ஒதுக்கீடு: இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

மேலும், இந்த 750 மில்லியன் டாலர் ஒப்பந்தம், விநியோகம் மட்டுமல்லாமல் தடுப்பூசிக்கான 300 மில்லியன் அளவுகளை உற்பத்தி, கொள்முதலுக்கும் ஆதரவாக இருக்கும். ஏற்கெனவே, 300 மில்லியனுக்கும் மேலான தடுப்பூசியை அமெரிக்காவுக்கும், 100 மில்லியனுக்கும் மேலான தடுப்பூசியை இங்கிலாந்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனையடுத்து, லாபம் பார்க்காமல் உலகளாவிய அணுகலை ஆதரிப்பதற்காக பல்வேறு முயற்சிகளையும் ஆஸ்ட்ராஜெனெகா எடுத்து வருகிறது. அதன்படி, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII) என்ற நிறுவனத்துடன் இணைந்து, வளர்ந்து வரும் மற்றும் நடுத்தர வருமானங்கள் கொண்ட நாடுகளுக்கு ஒரு பில்லியன் அளவை வழங்குவதற்கான உரிம ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covid தடுப்பூசி விநியோகத்துக்கு பில்கேட்ஸ் 750 மில்லியன் டாலர் ஒதுக்கீடு: இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

கடந்த மாதம் ஒரு பில்லியன் யூனிட் தடுப்பூசியை தயாரிக்க முடிந்துள்ளதால், இங்கிலாந்தில் உள்ள 10 ஆயிரம் பேருக்கு சோதனை முயற்சி நடத்தப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவ பரிசோதனைகள் வெற்றியடைந்துவிட்டால் முதல் அளவு தடுப்பூசி செப்டம்பர் மாதமே தயாராகிவிடும் என ஆஸ்ட்ராஜெனெகா தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories