Corona Virus

சென்னையில் மட்டும் 12 பேர் பலி... இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு! #Corona

தமிழகத்தில் தொடர்ந்து ஆறாவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக இன்று, 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களைத் தெரிவிப்பதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :

“தமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்களில் 33 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 15,692 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 5,60, 673 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு 861 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 15,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12,697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மட்டும் 12 பேர் பலி... இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு! #Corona

சென்னையில் இன்று புதிய உச்சமாக 1,116 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19, 826 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று உயிரிழந்த 12 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள். இதனால். சென்னையில் மட்டும் இதுவரை 178 பேர் உயிரிழந்துள்ளனர்.” எனத் தெரிவித்தார்.

மேலும், “தனியார் பரிசோதனை மையங்களுக்கு ஐ.சி.எம்.ஆர் நிர்ணயித்த 4,500 ரூபாய் கட்டணத்தை 3 ஆயிரம் ரூபாயாக குறைத்துள்ளோம். தடுப்பூசி, மருந்துகள் இல்லாமல் உயிர்காக்கும் வழிமுறைகளை அரசு பின்பற்றுகிறது. 30 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories