Corona Virus

ரயில் டிக்கெட் கிடைக்காத விரக்தி.. சேமிப்பு பணம் ரூ.1.5 லட்சத்தை செலவழித்து கார் வாங்கிய உ.பி. தொழிலாளி!

அரசின் சிறப்பு ரயிலில் செல்வதற்கு டிக்கெட் கிடைக்காததால் வேறு வழியில்லாமல் மொத்த சேமிப்பையும் செலவழித்து சொந்த ஊருக்கு சென்றடைந்துள்ளார் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெயிண்டர் தொழிலாளி.

ரயில் டிக்கெட் கிடைக்காத விரக்தி.. சேமிப்பு பணம் ரூ.1.5 லட்சத்தை செலவழித்து கார் வாங்கிய உ.பி. தொழிலாளி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் நான்கு கட்ட ஊரடங்கு முடிவடைந்த போதும் கொரோனா பாதிப்பைவிட தொழிலாளர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் ஏராளம். 50 நாட்களுக்கு பிறகு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஷ்ராமிக் என்ற சிறப்பு ரயிலை இயக்கத் தொடங்கியது மத்திய மோடி அரசு.

ஆனால், அதிலும் பல்வேறு குழப்பங்கள், தாமதங்கள், குளறுபடிகள் என தொடர்ந்து வருகிறது. இந்த சிறப்பு ரயில் செல்வதற்காகவே தொழிலாளர்கள் உணவு கிடைக்காமல் மணிக்கணக்கில், நாள் கணக்கில் காத்திருக்கும் சூழலே உள்ளது. வேறு வழியில்லாமல் எப்படியாவது ஊருக்கு சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் அத்தனை தொழிலாளர்களும் காத்திருக்கின்றனர்.

ரயில் டிக்கெட் கிடைக்காத விரக்தி.. சேமிப்பு பணம் ரூ.1.5 லட்சத்தை செலவழித்து கார் வாங்கிய உ.பி. தொழிலாளி!

அந்த வகையில், உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் பெயிண்டர் தொழிலில் ஈடுபட்டு வந்த லாலன் என்ற தொழிலாளி 3 நாட்களாக ஷ்ராமிக் ரயில் டிக்கெட்டுக்காக காத்திருந்து கிடைக்காததால், வேறு வழியில்லாமல் பழைய கார் ஒன்றை வாங்கி சொந்த கிராமமான கோரக்பூரில் உள்ள கைதோலியாவுக்கு சென்றிருக்கிறார்.

இதற்காக, தன்னுடைய மொத்த சேமிப்பான 1.9 லட்சம் ரூபாயையும் வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துள்ள அவர், அதில் 1.5 லட்சம் ரூபாயையை கார் வாங்குவதற்கு செலவழித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள லாலன், “ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் நிலைமை சீராகிவிடும் என்ற நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், தொடர்ந்து நீட்டிக்கப்பட்டே வந்ததால், காசியபாத்தில் பணியை தொடர முடியும் என்ற நம்பிக்கையில்லாததால் அரசு ஏற்பாடு செய்த பேருந்து மற்றும் ரயிலில் செல்ல முயற்சித்தேன்.

ஆனால், டிக்கெட்டும் கிடைக்கவில்லை. அதேச்சமயத்தில், வழக்கத்துக்கு மாறாக கூட்டம் நிறைந்து காணப்பட்டதால் குடும்பத்துடன் அதில் செல்ல ஏதுவாக இருக்காது என எண்ணி, என் ஒட்டுமொத்த சேமிப்பையும் செலவழித்தேன்.”

ரயில் டிக்கெட் கிடைக்காத விரக்தி.. சேமிப்பு பணம் ரூ.1.5 லட்சத்தை செலவழித்து கார் வாங்கிய உ.பி. தொழிலாளி!

மே 29ம் தேதி கார் மூலம் குடும்பத்துடன் காசியாபாத்தில் இருந்து புறப்பட்ட லாலன் 14 மணிநேர பயணத்துக்கு பிறகு கோரக்பூரில் உள்ள கைதோலியாவை சென்றடைந்துள்ளார். முன்னதாக, கோரக்பூரில் வேலை கிடைத்தால் மீண்டும் காசியாபாத்துக்கு செல்ல மாட்டேன் எனவும் லாலன் கூறியிருந்தார்.

லாலனை போன்றே, நாட்டில் உள்ள அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் தெரிவித்து வருகின்றனர். இதனால், சிறு, குறு வணிகங்கள் கட்டாயம் வீழ்ச்சியை சந்திக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. ஆனால், மத்திய மாநில அரசுகள் சீரிய நடவடிக்கையை மேற்கொண்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories