Corona Virus

இன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா பாதிப்பு... 12 பேர் பலி - சென்னையைச் சூழ்ந்த தொற்று! #Corona

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று 1,384 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக தொற்று எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவுக்கு 1,384 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் ஒருவர் குவைத்தில் இருந்தும், 5 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும், 4 பேர் தெலங்கானாவில் இருந்தும், ஒருவர் கேரளாவில் இருந்து ஒருவரும் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 18,693 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா பாதிப்பு... 12 பேர் பலி - சென்னையைச் சூழ்ந்த தொற்று! #Corona

தமிழகத்தில் இன்று மட்டும் 16, 447 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. தற்போது வரை ஒட்டுமொத்தமாக 5,44,981 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு இன்று மட்டும் 585 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 14,901 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 12,132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories