சென்னையில் மட்டுமே இன்று 1,012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதால் மக்கள் வெகுவாக அச்சமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்றைய அறிக்கையையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது.
இன்று பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 27 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 15 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டுமே இன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முதன்முறையாக ஆயிரத்தைக் கடந்துள்ளது. சென்னையில் இன்று 1,012 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் மொத்த பாதிப்பு 17,598 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு 616 பேர் வீடு திரும்பியதை தொடர்ந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,316 ஆக உயர்ந்தது. தற்போதைய நிலையில் 11,435 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இன்று கொரோனா பாதிப்பால் 11 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கையும் 208 ஆக அதிகரித்துள்ளது.