Corona Virus

ஒரேநாளில் 8171 பேருக்கு கொரோனா: உலகளவில் இந்தியாவுக்கு 7வது இடம்.. இனியாவது விழித்துக்கொள்ளுமா மோடி அரசு?

4 கட்ட ஊரடங்குகள் முடிந்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கவுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதற்கட்ட தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, நாட்டு மக்கள் 21 நாட்கள் ஒத்துழைப்பு கொடுப்பின் நம்மால் கொரோனாவை ஒழித்துவிட முடியும் என வாய்ப்பந்தல் இட்ட பாஜக அரசு, 4 கட்ட ஊரடங்கு அதாவது 68 நாட்கள் முழுமையடைந்திருக்கும் நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையோ 2 லட்சத்தை நெருங்கி வருகிறது.

மொத்தமாக ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 370 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதில், 95 ஆயிரத்து 754 பேர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தாலும், அனைவருமே பூரண நலம் பெற்றிருக்கிறார்களா என்பதை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

ஏனெனில் அறிகுறியற்ற தொற்று பாதிப்பு உண்டாவதால், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்காமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வருகிறது மத்திய அரசு. ஆதன் காரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

ஒரேநாளில் 8171 பேருக்கு கொரோனா: உலகளவில் இந்தியாவுக்கு 7வது இடம்.. இனியாவது விழித்துக்கொள்ளுமா மோடி அரசு?

அதேச்சமயத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 8,171 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 204 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்திருக்கிறார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 70 ஆயிரத்து 13 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 23 ஆயிரத்து 495 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வரும் வேளையில், Unlock 1.0 என்ற பேரில், மோடி அரசு, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது

ஏற்கெனவே ஜூலை, ஆகஸ்ட் முடிவில் 10 லட்சம் பேர் வரை இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்படலாம் என ஐசிஎம்ஆர் கணித்திருந்த நிலையில், இந்த ஊரடங்கு தளர்வு அதனை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஒரேநாளில் 8171 பேருக்கு கொரோனா: உலகளவில் இந்தியாவுக்கு 7வது இடம்.. இனியாவது விழித்துக்கொள்ளுமா மோடி அரசு?

எனவே, இப்போதாவது அரசு விழித்துக்கொண்டு பரவலான சோதனையை அதிகபடுத்தி உரிய சிகிச்சையை அளித்து நாட்டையும் நாட்டு மக்களையும் கொரோனாவின் பிடியில் இருந்து அரசு காக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

முன்னதாக, உலக அளவில் கொரோனா பாதிப்பில் 11வது இடத்தில் இருந்து, முதல் 10 நாடுகளில் பட்டியலில் கடைசியாக இருந்த இந்தியா தற்போது, 7வது இடத்துக்கு வந்துள்ளது மிகப்பெரிய அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories