Corona Virus

தமிழகத்தில் இன்றும் 1000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு : சென்னையில் 964 பேருக்கு வைரஸ் தொற்று! #CoronaUpdates

தமிழகத்தில் இரண்டாவது நாளாக ஆயிரத்துக்கும் மேலான கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் உச்சபட்சமாக 964 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் இன்று 10 ஆயிரத்து 964 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 964 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆகவே மொத்த பாதிப்பு 23 ஆயிரத்து 495 ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் 15 ஆயிரத்து 770 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வெளிமாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 50 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இறக்குமதி பாதிப்புகள் 1,620 ஆக அதிகரித்துள்ளது.

பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடப்பது போல, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மூன்றாவது நாளாக இரட்டை இலக்கத்தில் உள்ளது. அதன்படி, இன்றும் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார்கள். அதில் 9 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் இன்றும் 1000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு : சென்னையில் 964 பேருக்கு வைரஸ் தொற்று! #CoronaUpdates

இதையடுத்து, இதுவரை 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், இன்று 413 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 13 ஆயிரத்து 170 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டுமே 8 ஆயிரத்து 181 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதால், எஞ்சிய 7 ஆயிரத்து 450 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 138 ஆக உயர்ந்துள்ளது.

banner

Related Stories

Related Stories