Corona Virus

தமிழகத்தில் முதன்முறையாக 938 பேருக்கு வைரஸ் தொற்று : மேலும் 6 பேர் பலி - கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12 ஆயிரம் பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 82 பேர் நீங்கலாக, தமிழகத்தில் மட்டுமே இன்று 854 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதன்மூலம், ஒட்டுமொத்த பாதிப்பு 21 ஆயிரத்து 184 ஆக அதிகரித்துள்ளது. இன்று 12 ஆயிரத்து 39 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 599 ஆண்கள், 338 பெண்கள், ஒரு மாற்று பாலினத்தவர் என 938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது போல், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் படி இன்று மேலும் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையொட்டி, மொத்த பலி எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக 938 பேருக்கு வைரஸ் தொற்று : மேலும் 6 பேர் பலி - கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா!

மேலும், இன்று 687 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால், இதுகாறும் 12 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சமீபகாலமாக டிஸ்சார்ஜ் செய்யப்படுவர்கள் அனைவரும் பூரணமாக குணமடைந்தார்களா இல்லையா என்பதை அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஏனெனில், 10 நாட்களுக்கு பிறகு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இல்லாமல் இருந்தால் வீட்டுக்கு அனுப்பப்படுவதாலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

வழக்கம் போல், இன்றும் சென்னையிலேயே அதிக அளவிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இன்று ஒரே நாளில் 616 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, மொத்தமாக 13 ஆயிரத்து 980 பேர் இதுவரை சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், பலியானவர்கள் 119 பேராகவும், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 321 ஆகவும் உள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக 938 பேருக்கு வைரஸ் தொற்று : மேலும் 6 பேர் பலி - கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா!

ஆகவே, தற்போது 6 ஆயிரத்து 539 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 21 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 25 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 94 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த எண்ணிக்கை 1,094 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த மே 9ம் தேதியில் இருந்து இதுவரை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் 93 ஆயிரத்து 482 பேரில் ஆயிரத்து 475 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளது உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories