Corona Virus

“கொரோனா சிகிச்சைக்கு பல லட்சம் வசூலிக்கும் மருத்துவமனை”: ஸ்டிங் ஆபரேஷனில் அம்பலம் - மு.க.ஸ்டாலின் தாக்கு!

தனியார் தொலைக்காட்சி நடத்திய 'ஸ்டிங் ஆபரேஷன்' மூலம் கொரோனா சிகிச்சையில் நடக்கும் மாபெரும் ஊழல் அம்பலமாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் நடக்கும் மாபெரும் ஊழல் அம்பலமாகியுள்ளது.

கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்த, தனியார் மருத்துவமனை வாங்கும் கட்டணங்களின் விபரம் தனியார் செய்தித் தொலைக்காட்சி நடத்திய புலனாய்வின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையின் குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிக்க 3 லட்சம் முன்பணம் கட்ட வேண்டும் என்றும் நாளொன்றுக்கு படுக்கை கட்டணமாக 1.5 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் மருத்துவமனை பணியாளர் நோயாளியின் உறவினர் எனக் கூறிக்கொள்ளும் நிருபரிடம் தெரிவிக்கிறார்.

மேலும், நாளொன்றுக்கு மருத்துவ/செவிலியர் பாதுகாப்பு உடைகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் செலுத்தவேண்டும் எனவும் மருத்துவமனை பணியாளர் அந்த உரையாடலில் தெரிவிக்கிறார். இந்தத் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதனைக் குறிப்பிட்டு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“கொரோனா நோய்த் தொற்று இந்த அளவுக்கு, தீவிரமாக பரவி வரும் வேளையிலும், தங்களிடம் கோவிட்-19 சிகிச்சைக்கு வரும் மக்களிடம் தனியார் மருத்துவமனைகள் அதிகப்படியான கட்டணத்தை வசூலிக்க அனுமதிப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.

தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுவரும் பல்வேறு சலுகைகளை நேற்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய நிலையில் இந்நிகழ்வு அரங்கேறியுள்ளது.

பிற மாநிங்களைப் போல தமிழக அரசும் தனியார் மருத்துவமனைகளை உடனடியாக ஒழுங்குமுறைப்படுத்தி, கடினமான இந்தச் சூழ்நிலையில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு உதவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories