Corona Virus

“கொரோனா வைரஸை வளர்க்கும் இந்திய ஆராய்ச்சியாளர்கள்” - ஏன் தெரியுமா? #Covid19

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கைக்கு உதவும் வகையில் கொரோனா வைரஸை நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர்கள் வளர்த்து வருகின்றனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கைக்கு உதவுவதற்காக கொரோனா வைரஸை நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர்கள் வளர்த்து வருகின்றனர்.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கான முயற்சிகள் அனைத்தையும், உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தற்போதுவரை 14 வகையான தடுப்பு மருந்துகள் ஆய்வில் பல்வேறு கட்டங்களை அடைந்துள்ளன. அதில் நான்கு தடுப்பூசி மருந்துகள் இன்னும் 3 முதல் 5 மாதங்களுக்குள் சோதனை கட்டத்தை எட்டிவிடும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் மூலம் கொரோனா வைரஸை நிலையாக வளர்க்கும் முறையை உயிரணு மற்றும் நுண்ணுயிரியல் (CCMB) உருவாக்கியுள்ளது.

“கொரோனா வைரஸை வளர்க்கும் இந்திய ஆராய்ச்சியாளர்கள்” - ஏன் தெரியுமா? #Covid19

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பலரிடமிருந்து இந்த வைரஸ்களை CCMB-யை (Centre for Cellular and Micro Biology – CCMB) சேர்ந்த வைராலஜி நிபுணர்கள் பெற்றுள்ளனர்.

அதன்படி, கொரோனா வைரஸ் வெற்றிகரமாக பரிசோதனைக் கூடங்களில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ்களை வளர்ப்பதன் மூலம், தடுப்பு மருந்து உருவாக்குதல் மற்றும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்துகளைப் பரிசோதிக்க முடியும்.

மருந்துப் பரிசோதனை நடவடிக்கைகளுக்கும், இந்த வைரஸ் வளர்ப்பு உதவும். சோதனைக் குழாய்களில் வைரஸுக்கு எதிரான மருந்துகளின் செயல்பாட்டுத் திறனைப் பரிசோதிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories