Corona Virus

தடுப்பு மருந்துக்காக போராடும் உலக நாடுகள்... மாட்டு சாணத்தை மருந்தாக கொடுக்க முயற்சிக்கும் பா.ஜ.க அரசு!

கொரோனா வைரஸூக்கு எதிராக உலக நாடுகள் போராடி வரும் வேளையில் பசுவின் சாணம், கோமியம் கொண்ட கலவையை மருந்தாக கொடுக்க இந்தியாவில் சோதனை முயற்சி தொடங்கியுள்ளது.

தடுப்பு மருந்துக்காக போராடும் உலக நாடுகள்... மாட்டு சாணத்தை மருந்தாக கொடுக்க முயற்சிக்கும் பா.ஜ.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்கா, பிரிட்டன், என பல்வேறு உலக நாடுகள் அனைத்தும், கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையிலும், பெருந்தொற்றில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பு மருந்தும், குணப்படுத்தும் மருந்தும் கண்டுபிடிக்கும் பணியில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

பல்வேறு ஆய்வுகள், ஆராய்ச்சிகள் என தொடங்கி இங்கிலாந்தில் முதற்கட்ட சோதனை முயற்சியிலும் வெற்றிக்கண்டு அடுத்தத்தடுத்த பணிகளில் இன்னும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏனேனில், உலகமே அஞ்சி நடுங்கும் இந்த கொரோனாவுக்கு தடுப்பு மருந்தே மிகவும் சிறந்தவையாக இருக்கும் என்பதே ஒருமித்த கருத்தாக உள்ளது. அதற்காகவே இத்தனை இத்தனை போராட்டங்களும், சோதனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உலகெங்கும் கொரோனாவுக்கு எதிரான போர் இதுவாக இருக்கும் நிலையில் இந்தியாவிலோ இன்னும் பசுவின் பின்னால் சென்று மருந்தை கண்டுபிடிக்கும் நிலையிலேயே மோடி அரசு உள்ளது என்பதற்கு உதாரணமாக உள்ளது பஞ்சகாவ்யா மருத்துவம்.

தடுப்பு மருந்துக்காக போராடும் உலக நாடுகள்... மாட்டு சாணத்தை மருந்தாக கொடுக்க முயற்சிக்கும் பா.ஜ.க அரசு!

ஆம், பசுவின் சாணம், கோமியம், பால், வெண்ணெய், நெய் என அனைத்தும் கலந்ததை பஞ்சகாவ்யா என பெயரிட்டு அதனை மருந்தாக மாற்றியுள்ளது குஜராத் அரசு. இது தொடர்பாக ‘அகமதாபாத் மிரர்’ பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள ராஷ்டிரிய காமதேனு ஆயோக்கின் தலைவர் மருத்துவர் வல்லாபா கத்ரியா, “பஞ்சகாவ்யா மருத்துவம் நூற்றாண்டு பழமையான மருத்துவமாக இருப்பதால் நவீன மருத்துவ சூழலில் அவை இன்னும் நிறுவப்படாமல் உள்ளது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலகம் முழுவதும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த பஞ்சகாவ்யா சிறந்த சிகிச்சை பலனை அளிக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே, சோதனை முயற்சியாக நாட்டில் உள்ள 10 மருத்துவமனைகளில் இந்த பஞ்சகாவ்யா பரிசோதிக்கப்பட உள்ளது.

அதன்படி முதல் குஜராத்தில் உள்ள, ராஜ்கோட் மருத்துவமனையில் இருந்து தொடங்கி, அகமதாபாத், வர்தா, புனே, ஐதராபாத் மற்றும் ஜோத்பூர் ஆகிய பகுதிகளில் இந்த பஞ்சகாவ்யா மருத்துவ சோதனை நடத்தப்பட உள்ளது. விஞ்ஞான ரீதியில் இந்த மருத்துவம் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் பலர் பஞ்சகாவ்யா மருந்து மூலம் பல்வேறு நோயில் இருந்து குணமடைந்திருப்பதாக கூறியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

தடுப்பு மருந்துக்காக போராடும் உலக நாடுகள்... மாட்டு சாணத்தை மருந்தாக கொடுக்க முயற்சிக்கும் பா.ஜ.க அரசு!

முன்னதாக, பா.ஜ.க எம்.பியான பிரக்யா சிங் தாகூர், பசுவின் சாணம், கோமியம் கலந்த பஞ்சகாவ்யா மருந்தை உண்டதன் மூலம் தன்னுடைய மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டதாக கூறியிருந்தார். ஆனால், லக்னோவில் உள்ள பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் இது தொடர்பாக கூறுகையில் பிரக்யாவுக்கு 2008 மற்றும் 2012ம் ஆண்டுகளில் அறுவை சிகிச்சை செய்ததன் மூலமே குணமாகினார் என அம்பலப்படுத்தினார்.

இவ்வாறு இருக்கையில், உலகமே அஞ்சி நடுங்கும் கொரோனா வைரஸுக்கு பஞ்சகாவ்யா மருத்துவத்தை மேற்கொண்டால் அது நோயினால் போராடுபவர்களுக்கு மேலும் சிக்கலையே ஏற்படுத்தும் என எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

banner

Related Stories

Related Stories