Corona Virus

சென்னையில் தீவிரமடையும் கொரோனா பரவல்... 10,576 பேருக்கு வைரஸ் பாதிப்பு... இன்றைய பாதிப்பு நிலவரம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 277 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 765 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

துபாய், பிலிஃபைன்ஸ், லண்டனில் இருந்த வந்த தலா ஒருவர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 45 பேர் தவிர தமிழகத்தில் மட்டுமே இன்று 718 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று 11 ஆயிரத்து 441 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 464 ஆண்களும், 301 பெண்களும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் தீவிரமடையும் கொரோனா பரவல்... 10,576 பேருக்கு வைரஸ் பாதிப்பு... இன்றைய பாதிப்பு நிலவரம்!

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8324 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 833 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் 7 ஆயிரத்து 839 பேருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இன்று ஏற்பட்ட பாதிப்பு எண்ணிக்கையில் 587 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 576 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டுமே இதுவரை 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். இன்று உயிரிழந்த 8 பேரில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். எஞ்சியவர்கள் திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே மொத்த பலி எண்ணிக்கை 111 ஆக உயந்துள்ளது.

banner

Related Stories

Related Stories