Corona Virus

இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு... பலி எண்ணிக்கை 98 ஆனது! #CoronaUpdates

தமிழகத்தில் இன்று 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னையில் 569 பேர் உள்பட தமிழகத்தில் இன்று 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 786 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 846 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,128 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு... பலி எண்ணிக்கை 98 ஆனது! #CoronaUpdates

கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய பாதிப்பில் சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 569 பேர் ஆவர். இதனால் தலைநகர் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 9,364 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 3,68,939 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என சுகாதாரத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories