Corona Virus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா.. சென்னையில் மட்டுமே 552.. மூவர் பலி - #CoronaUpdates

இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 688 பேரில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டுமே 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் இன்று 9 ஆயிரத்து 844 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 688 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 601 பேருக்கும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 87 பேருக்கும் தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா.. சென்னையில் மட்டுமே 552.. மூவர் பலி - #CoronaUpdates

இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 552 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு 7,672 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 12 ஆயிரத்து 448 ஆக உள்ளது.

ஏற்கெனவே 81 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று மேலும் மூவர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள். அதில், இருவர் சென்னையிலும் ஒருவர் திருவள்ளூரிலும் உயிரிழந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா.. சென்னையில் மட்டுமே 552.. மூவர் பலி - #CoronaUpdates

குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,895 ஆக உயர்ந்திருக்கிறது. இன்று மட்டுமே 489 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆகையால் தற்போது 7,466 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 407 பேர் ஆண்களும், 281 பெண்களும் ஆவர். அதில் 12 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே 38 பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories